எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் மதுபோதை வெறி | TASMAC | Chennai | Crime
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 9வது பிளாக்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பாலகிருஷ்ணன் வாட்ச்மேனாக உள்ளார். வியாழனன்று மதியம் 3 மணிக்கு 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த இரும்பு பைப்பை உடைத்து அதனை திருட முயன்றனர். அப்போது வாட்ச்மேன் பாலகிருஷ்ணன் சத்தம் போட்டார். இங்க வந்து என்ன செய்றீங்க? போலீசுக்கு சொல்லப்போறேன் என எச்சரித்தார். பயந்து போன கும்பல் பாலகிருஷ்ணன் தலையில் கல்லால் ஓங்கி அடித்தனர். அவர் சுருண்டு கீழே விழுந்தார். அங்கேயே மயங்கினார்.
ஜூலை 12, 2024