டாஸ்மாக் கடை திறக்காததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் | Tasmac employees | Proterst | | Kanchipuram
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில வாணிப கழகமான டாஸ்மாக், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அமல்படுத்தி உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள 80 டாஸ்மாக் கடைகளில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் செலுத்தி மதுபானம் வாங்கிவிட்டு காலி பாட்டில்களை அதே கடையில் மீண்டும் கொடுத்தால் அவர்கள் செலுத்திய 10 ரூபாய் திருப்பி வழங்கப்படும். ஆனால் இந்த திட்டத்திற்கு காஞ்சிபுரம் டாஸ்மாக் பணியாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.