உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐடி கம்பெனிகள் போல மாறும் டாஸ்மாக் - ஊழியர்களுக்கு கடுமையாகும் விதிகள் | TASMAC Employees

ஐடி கம்பெனிகள் போல மாறும் டாஸ்மாக் - ஊழியர்களுக்கு கடுமையாகும் விதிகள் | TASMAC Employees

டாஸ்மாக் மதுக்கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் பணியிடங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் 8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட புதிய விதிமுறைகளை டிசம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் தினமும் 8 மணி நேர பணி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் ஏழு நாட்களில், 48 மணி நேரத்துக்கு மேல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுக்கலாம். ஆண்டுக்கு அதிகபட்சம், 24 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்கலாம். ஊழியர்களின் பணியை இரு வகையில் ஒழுங்குப்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. முதல் ஷிப்டு காலை 11:30 முதல் இரவு, 7:30 மணி வரையும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 2:30 முதல் இரவு 10:30 மணி வரையும் பணி நேரம் இருக்கும். மதியம், 12 மணிக்கு பணிக்கு வந்து, இரவு 10 மணி வரை இருக்க நேரிட்டால், தொடர்ந்து நான்கு மணி நேரம் பணியாற்றிய பின், ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். எந்த ஷிப்ட் முறையை எந்த ஊழியருக்கு ஒதுக்குவது என்பதை கடை மேற்பார்வையாளர் தீர்மானிப்பார். ஊழியர்களின் தற்செயல் விடுப்பு, மருத்துவ செலவு திருப்பி செலுத்துதல், பண்டிகை முன்பணம், சம்பளம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் கடைகளில் வழங்கப்பட்டுள்ள கையடக்க கருவி மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வருகை பதிவு முறை டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாகிறது. பணிக்கு வந்ததும் கருவியில், செக் இன் பதிவு செய்வதுடன், பணி முடிந்ததும் செக் அவுட் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TASMAC #TASMACEmployees #8HourShift #WeeklyOff #TamilNaduGovernment #OnlineAttendance #TamilNaduNews #ChennaiNews #DinamalarNews

நவ 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !