தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Tasmac liquor | Madras high court
பள்ளி, கோயில் அருகே டாஸ்மாக் கடையா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Tasmac liquor shops near school, temple madras high court தூத்துக்குடி மாவட்டம் கடச்சபுரத்தை சேர்ந்த ஞானமுத்து ஐகோர்ட் மதுரை கிளயைில் பொதுநல மனு மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், முதலூர் பகுதியில் சர்ச் மற்றும் அம்மன் கோயிலில் இருந்து 100 மீட்டருக்கு உள்ளாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது அதனை அகற்ற ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோர்ட்டும் உத்தரவிட்டது. டாஸ்மாக் நிர்வாகம் அந்த கடையை அகற்றி விட்டு, எதிர்புறத்தில் மீண்டும் கடையை திறந்துள்ளது. வழிபாட்டு தலத்தில் இருந்து 100 மீட்டருக்குள் டாஸ்மாக் கடை அமைப்பது சட்டவிரோதமானது. அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் ஞானமுத்துகூறியிருந்தார். இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கோயில், பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்க இடம் தேர்வு செய்வது ஏன் என அரசு வழக்கறிஞரை பாரத்து நீதிபதிகள் கேட்டனர்.