டாஸ்மாக் ஊழலில் திமுகவுக்கு பாஜ கிழி TASMAC scam | DMK tasmac scam | TN BJP tasmac protest | Stalin
தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலை தீவிரமாக கையில் எடுத்து பாஜவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை ஒட்டும் ஆர்ப்பாட்டத்தில் பாஜ மகளிர் அணி நிர்வாகிகள் நேற்று ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில இடங்களில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போது ஆர்ப்பாட்டம் தொடர்பாக திமுக அரசை கிண்டல் செய்து பாஜ மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். தமிழ்நாட்டின் அத்தனை அரசு அலுவலகங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களிலும் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டிருக்கிறது. இது மாநில தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வருடைய கட்டளைப்படி வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு புரோட்டோகால் முறையும் ஆகும். அப்படி இருக்க தமிழ்நாட்டின் 50000 டாஸ்மாக் கடைகளில் அவரது படம் வைக்கப்படவில்லை. இதை பார்த்து பாஜ மட்டுமே கவலைப்பட்டது.