உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடிமகன்களையே சிரிக்க வைத்த அதிகாரிகளின் அறிவு | TASMAC | TASMAC Bar

குடிமகன்களையே சிரிக்க வைத்த அதிகாரிகளின் அறிவு | TASMAC | TASMAC Bar

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் ரோட்டில் டாஸ்மாக் உள்ளது. அதன் அருகிலேயே பார் அமைந்துள்ளது. இங்கே அதிகாலையில் இருந்தே சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக புகார் வந்தது. போலீஸ் விசாரணையில் பாரில் முறைகேடாக மது விற்பது உறுதியானது. கோவை எஸ்பி கார்த்திகேயன் டாஸ்மாக் பாரை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். பார் முழுவதையும் தகர சீட்டுகள் கொண்டு அடைத்து சீல் வைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பார் ஊழியர்கள் தூங்கும் கட்டிலை நேராக நிறுத்தி சீல் வைத்து சென்றுள்ளனர் அதிகாரிகள்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை