உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் அருகே டாஸ்மாக்: குடிமகன் செய்த அலப்பறை | TASMAC | Chennai

கோயில் அருகே டாஸ்மாக்: குடிமகன் செய்த அலப்பறை | TASMAC | Chennai

சென்னை வேளச்சேரி குருநானக் ரோட்டில் பழைமையான மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் கோயிலுக்கு அருகிலேயே டாஸ்மாக் இயங்கி வருகிறது. அங்கே மது குடிக்க வரும் குடிமகன்கள் சில நேரங்களில் கோயில் குளத்தின் மீது அமர்ந்து அட்டூழியம் செய்கின்றனர். ஞாயிறன்று இரவு மது அருந்த வந்த ஆசாமி போதை தலைக்கு ஏறிய நிலையில் சட்டையை கழற்றி ரோட்டில் தேங்கியிருந்த கழிவுநீரில் துவைக்க ஆரம்பித்தான். இதனை கண்ட வாகன ஓட்டிகள் செய்வதறியாது நின்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ