உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நானும் ஜெயிலுக்கு போகணும்: டாஸ்மாக் கொளுத்திய ஆசாமி | TASMAC | Sirumugai

நானும் ஜெயிலுக்கு போகணும்: டாஸ்மாக் கொளுத்திய ஆசாமி | TASMAC | Sirumugai

கோவை, அன்னூர் அடுத்த வடக்கலூரை சேர்ந்தவர் மோகன், வயது 26. இவர் மீது போலீசில் 3க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரது நண்பர்களும் அடிதடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். இதனால் சமீப காலமாக மோகன் மட்டும் தனியாக இருந்துள்ளார். தனது தோஸ்துகள் இல்லாமல் வாடிப்போனார். அடிக்கடி வீடு, டாஸ்மாக்கே கதி என கிடந்துள்ளார். ஒரு கட்டத்தில் தோஸ்துகள் இல்லாமல் இருக்க முடியவில்லை. தானும் ஜெயிலுக்கு போக வேண்டும் என திட்டம் போட்டார். சிறுமுகை அடுத்த வெள்ளி குப்பம்பாளையம் டாஸ்மாக்கு போனார். மூச்சு முட்ட மது குடித்துவிட்டு டாஸ்மாக் கடைக்கே தீ வைத்தார்.

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி