உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளி செல்ல மறுக்கும் மாணவிகள்: தலை விரித்தாடும் டாஸ்மாக் | TASMAC Protest | Thirukalappatti School

பள்ளி செல்ல மறுக்கும் மாணவிகள்: தலை விரித்தாடும் டாஸ்மாக் | TASMAC Protest | Thirukalappatti School

சிவகங்கை, திருக்களாப்பட்டியில் அரசு பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது, ஊர் மக்கள் போராடி அரசு உயர்நிலைப் பள்ளியை கிராமத்துக்கு கொண்டு வந்தோம். இந்த பள்ளியில் திருக்களாப்பட்டி, காரேந்தல்பட்டி, சோழம்பட்டி, மணக்குடி, மாங்குடி கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பள்ளி அருகே டாஸ்மாக் கடை கொண்டுவரப்பட்டது. அப்போது தொடங்கி தினம் தினம் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம். மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி பள்ளிக்கு போதையில் வர துவங்கியுள்ளனர்.

ஜூன் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை