மதுபான ஆலைகளிடம் கமிஷன் பெற்றார்களா? DVAC raid Thoothukudi Tasmac godown
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் டாஸ்மாக் மதுபான குடோன் மற்றும் டாஸ்மாக் நிறுவன மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்கள் லாரிகள் மூலம் இங்குதான் கொண்டு வரப்படும். இங்கிருந்துதான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளுக்கும் மது வகைகள் அனுப்பி வைக்கப்படும். தங்கள் மதுபானங்களை மதுக்கடைகளுக்கு அனுப்பி வைப்பதில் முன்னுரிமை கொடுக்கச் சொல்லி மண்டல மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதுபான ஆலை தரப்பில் இருந்து குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கொடுப்பது வழக்கம்., இவ்வாறு கிடைக்கும் தொகையை டாஸ்மாக் மண்டல அலுவலக ஊழியர்கள் பங்கு போட்டு கொள்கிறார்கள் என தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.