சிபிஐ கைக்கு போகும் டாஸ்மாக் கேஸ்? ஐகோர்ட் அதிரடி | tasmac scam case | ED tasmac case | dmk vs cbi
டாஸ்மாக் கடைகளில் 2017 முதல் 2024 வரை அதிக விலைக்கு மதுபானம் விற்றது; பார் உரிமம் வழங்கியது; ஊழியர்கள் இடமாற்ற விவகாரம் உள்ளிட்டவற்றில் நடந்த முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் 41 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 23 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியது. இந்த நிலையில் டாஸ்மாக் மற்றும் அதன் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த பாஜ வக்கீல் வெங்கடாசலபதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுகிறது. 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு நியாயமாகவும், இடையூறு இன்றியும் விசாரிக்கப்பட வேண்டும். எனவே மாநில விசாரணை அமைப்பில் இருந்து 41 வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், வி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.