பாலியல் புகாரில் ஆசிரியர் கைது: பொங்கிய மாணவிகள்: பரபரப்பு | Teacher arrested | vaniyambadi | kaval
திருப்பத்தூரில் சாட்டை சம்பவம் கொந்தளித்து எழுந்த மாணவிகள் ஓடி வந்த போலீஸ் நடந்தது என்ன? திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், மலைரெட்டியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிககின்றனர். பிரபு என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 21ம் தேதி நடந்த கம்ப்யூட்டர் தேர்வின் போது ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் பிரபு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணில் ஒரு மாணவி புகார் அளித்தார். திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ என்பவர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். பிரபு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 6 மாணவிகள் கூறினர். எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்ற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்கு பதிவு செய்து ஆங்கில ஆசிரியர் பிரபுவை கைது! செய்தனர். போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர் பிரபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நி லையில், அவருக்கு ஆதரவாக பள்ளியில் பயிலும் மொத்த மாணவிகளும் பொங்கிஎழுந்தனர். ஆசிரியர் பிரபு தவறு செய்யவில்லை. அவர் மீது பொய்யாக புகார் கூறப்பட்டுள்ளது என கூறி 100க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ப்ரத் டிஎஸ்பி விஜயகுமார் விரைந்து சென்று மாணவிகளை கலைநது செல்லும்படி கூறினார். மாணவிகள் கேட்கவில்லை. ஆசிரியர் பிரபு தவறு செய்யவில்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றனர். உங்கள் கோரிக்கை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி விஜயகுமார் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, 2 மணி நேர மறியலை கைவிட்டு மாணவிகள் அவரவர் வகுப்பறைக்குள் சென்றனர்.