உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிராகரித்த ஆசிரியை: வாலிபர் செய்த கொடூரம் | School Teacher | Thanjavur | Crime

நிராகரித்த ஆசிரியை: வாலிபர் செய்த கொடூரம் | School Teacher | Thanjavur | Crime

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி வயது 26. கடந்த 4 மாதங்களாக மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ரமணிக்கும், சின்னமனை பகுதியை சேர்ந்த 30 வயதான மதனுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் மதன் குடும்பத்தினர் பெண் கேட்டு சென்றனர். ஆனால் ரமணி, மதனை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் அவர் மீது மதன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இன்று காலை ரமணி பள்ளியின் ஆசிரியர் அறையில் இருந்தார். அங்கு சென்ற மதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமணியில் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி