உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுரங்கத்தில் மீட்பு பணிகளை பார்வையிட்ட சியெம் ரேவந்த் | Telangana | CM Revanth Reddy | SLBC tunnel

சுரங்கத்தில் மீட்பு பணிகளை பார்வையிட்ட சியெம் ரேவந்த் | Telangana | CM Revanth Reddy | SLBC tunnel

சுரங்கத்தில் புதைந்த 8 பேர் உடல்களை மீட்பதில் சிக்கல்! தெலங்கானா முதல்வர் சொன்ன தகவல் தெலங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டப்பணிக்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்றது. அப்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில் 2 இன்ஜினியர்கள், 2 ஆபரேட்டர்கள், 4 தொழிலாளர்கள் என 8 பேர் கடந்த 22ம் தேதி சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்க 1 வாரத்திற்கு மேலாக மீட்பு பணி நடக்கிறது. சுரங்கத்தில் சேறும் சகதியும் நிறைந்து இருப்பது மீட்பு பணிக்கு பெரும் சவாலாக இருந்தது. சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் சகதியில் மூழ்கியும், இடிபாடுகளில் சிக்கியும் இறந்துபோனது, அதிநவீன சிறிய ரக ட்ரோன் மூலம் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சம்பவம் நடந்த சுரங்கத்தை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பார்வையிட்டார். மீட்பு பணி நிலவரம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் அவர் பேட்டி அளித்த அவர், இது எதிர்பாராத விபத்து. மீட்பு குழுவினர் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு துணையாக இருக்கும். இறந்தவர்கள் உடல்களை வெளியே எடுக்க இன்னும் 2 நாட்களாவது ஆகலாம். இந்த சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என முதல்வர் ரேவந்த் கூறினார்.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி