தமிழகத்திலும் இதே கதி தானா? தெலுங்கானா சிஎம் ஓபன் டாக் | Telangana | Revanth Reddy
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் பல இலவசங்களை அள்ளி வீசி ஆட்சியை பிடித்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உதவித்தொகை, வேலையில்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய், முதியோர்களுக்கு மாதம் 4,000 ஓய்வூதியம், பெண்களுக்கு இலவச பேருந்து, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் விலையில்லா மின்சாரம் என இலவச பட்டியல் நீண்டது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னது தானே தவிர இவற்றில் பல அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா அரசின் மாதவருமானம் 18,500 கோடி ரூபாயாக உள்ளது. அதில் 6,500 கோடி அரசு பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்கு செலவாகிறது. மாநிலத்தின் கடன்கள் மற்றும் வட்டிக்காக 6,500 கோடி செலுத்த வேண்டும். நலத்திட்ட மேம்பாட்டிற்காக வெறும் 5,000 முதல் 5,500 கோடி மட்டுமே எஞ்சி இருக்கிறது என்கிறார். தெலுங்கானா அரசு நன்றாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எனக்கு ஒரு தவறான புரிதல் இருந்தது. முதல்வரான பிறகு மாநிலத்தின் பொருளாதாரம் பற்றிய உண்மையான நிலையை உணர்ந்தேன். மாநிலத்தின் மூலதனச் செலவுகளுக்கு மாதத்திற்கு 500 கோடி ரூபாய் கூட இருப்பில் இல்லை. மாநிலத்தின் எதிர்காலம் என்னவாகும்? என்று ரேவந்த் ரெட்டி புலம்பினார். ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கொடுத்த இலவச தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை என்பதை ரேவந்த் ரெட்டி ஒப்புக்கொண்டார். இலவச அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் எடுத்து வைத்துள்ளார். இதனை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய விவாதம் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே 2021ல் திமுக ஆட்சி அமைந்த போது அப்போது நிதி அமைச்சராக தியாகராஜன் மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் கொடுத்தால் தமிழக அரசுக்கு நெருக்கடி என கூறி இருந்தார். இப்போது ரேவந்த் ரெட்டி வெளிப்படையாக இலவச அரசியல் மாநில பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.