உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷாப்பிங் மால், சாலைகளை மூடுங்கள் மத்திய அரசை விமர்சித்த டெலிகிராம்

ஷாப்பிங் மால், சாலைகளை மூடுங்கள் மத்திய அரசை விமர்சித்த டெலிகிராம்

நாடு முழுவதிலும் கடந்த மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். வினாத்தாள் லீக் ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. வரும் 21ம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது டெலிகிராம் ஆப் மூலம் வினாத்தாள் லீக் ஆனது உறுதி செய்யப்பட்டதால், நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்தது. இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதி தேஜஸ் காரியா Tejas Karia அமர்வில் தாக்கல் செய்த மனுவில், அரசின் தடையால் 15 கோடி பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. காங்கிரஸ் எம்பி கார்த்தி, உண்மையிலேயே வினாத்தாள் கசிவை தடுக்க டெலிகிராம் செயலியை முடக்குவது தான் மாஸ்டர் ஸ்ட்ரோக்கா என்று தேர்வு முகமைக்கு கேள்வி எழுப்பி இருந்தார் அந்த பதிவுக்கு டெலிகிராமின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இருந்து மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக கமெண்ட் பதிவிடப்பட்டது. ஒரு வணிக வளாகத்தில் திருட்டு நடைபெறக்கூடும் என்பதால் அனைத்து ஷாப்பிங் மால்களையும் மூடுங்கள். யாராவது வாகனத்தை வேகமாக ஓட்டக்கூடும் என்பதால், சாலைகளை மூடிவிடுங்கள் என டெலிகிராம் பதிவிட்டுள்ளது. #NEET_EXAM #Paper_Leak #Telegram #ban #centre #Delhi_High_Court #Pavel_Durov #Criticize #Kartipchidambaram #BJP #Congress #Temporary_ban #Twitter #TelegramCEO #Breakingnews

ஜூன் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை