உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நள்ளிரவில் குரைத்த நாய்கள்! அடையாளம் காட்டிய சிசிடிவி | | Temple | Thiruporur | Theft

நள்ளிரவில் குரைத்த நாய்கள்! அடையாளம் காட்டிய சிசிடிவி | | Temple | Thiruporur | Theft

செங்கல்பட்டு திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோயில் ஒன்று உள்ளது. உள்ளே சிவன் , பிள்ளையார் , நவகிரக சன்னதியும் உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பூட்டப்படும். அர்ச்சகர் இரவு பூஜைகளை முடித்து நேற்று கோயிலை பூட்டி வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு 12.30 மணி அளவில் கோயிலை சுற்றி நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அருகே உள்ள வீட்டில் வசிக்கும் கோயில் நிர்வாகி மகேஷ் தனது செல்போன் மூலம் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது 3 மர்ம நபர்கள் கோயில் உள்ளே உலவுவதை கண்டார். கடப்பாரை மூலம் உண்டியலை பெயர்த்து எடுக்க முயற்சி செய்வதை பார்த்து தனது நண்பர்களுக்கும், கிராமத்தாருக்கும் தகவல் கொடுத்தார்.

மே 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை