/ தினமலர் டிவி
/ பொது
/ சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு வெளியே நடந்த சம்பவம் | Temple kumbabishegam | Devotees suffered | Sank
சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு வெளியே நடந்த சம்பவம் | Temple kumbabishegam | Devotees suffered | Sank
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி அளவில் நடந்தது. கும்பாபிஷேகத்தை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் சன்னதி தெரு, ரத வீதிகளில் குவிந்தனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே அனுமதி சீட்டு வழங்கப்பட்ட சுமார் 1500 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வெளியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஆக 23, 2024