உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அதிர்ந்து போன ஐகோர்ட் | Temple Land Encroachment

கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அதிர்ந்து போன ஐகோர்ட் | Temple Land Encroachment

கரூர், வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணைகளை தொடர்ந்து நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அரசியல் தலைவர்கள், பிறரின் போராட்டங்கள் காரணமாக, கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. ஆக்கிரமிப்பாளர்களில், 27 பேர் அரசு அதிகாரிகள், 49 பேர் தொழிலதிபர்கள், 38 பேர் செல்வாக்குமிக்கவர்கள்.

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !