/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு அலுவலகத்தில் புகுந்து அடித்தவரை தேடுகிறது போலீஸ் | Sub registrar | attack | Tenkasi
அரசு அலுவலகத்தில் புகுந்து அடித்தவரை தேடுகிறது போலீஸ் | Sub registrar | attack | Tenkasi
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில், செல்லத்துரை என்பவர் சார்பதிவாளராக இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த முனீஸ்பாண்டி, ஆயால்பட்டியை சேர்ந்த சின்னத்துரை உள்பட 3 பேர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். பட்டா இல்லாத குறிப்பிட்ட நிலம் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி, மூவரில் ஒருவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து தரும்படி கேட்டுள்ளனர். பட்டா இல்லாமல் பதிவு செய்ய முடியாது என சார்பதிவாளர் செல்லத்துரை மறுத்துவிட்டார். இதனால் மூவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
மே 06, 2025