உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யார் இந்த காஷ்மீர் புலிகள்? பின்னால் பாகிஸ்தான் | doda terrorist attack | kashmir tigers | doda

யார் இந்த காஷ்மீர் புலிகள்? பின்னால் பாகிஸ்தான் | doda terrorist attack | kashmir tigers | doda

காஷ்மீரில் என்ன நடக்கிறது? இரவோடு இரவாக தாக்குதல் தொடரும் திக் திக் காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் தலை தூக்கி உள்ளது. சில வாரங்களாக தொடர் தாக்குதல் நடக்கிறது. திங்கள் மாலையில் தோடா மாவட்டம் தேசா காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. உடனே ராஷ்ட்ரிய ரைபிள் படையினர், காஷ்மீர் போலீசின் சிறப்பு ஆப்ரேஷன் டீம் அந்த இடத்துக்கு விரைந்தது. அப்போது பயங்கரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. தாக்குதலை சமாளிக்க முடியாமல் பயங்கரவாதிகள் ஓட்டம் பிடித்தனர். அடர்ந்த காட்டுக்குள் ஓடிய போதும், வீரர்களில் ஒரு பகுதியினர் அவர்களை பின் தொடர்ந்தனர். மீண்டும் துப்பாக்கிச்சண்டை வெடித்தது. அப்போது நேரம் இரவு 9 மணி இருக்கும். இரு தரப்பினரும் 20 நிமிடம் கடுமையாக மோதினர். ஒரு கட்டத்தில் வீரர்கள் 4 பேர் மீது சரமாரியாக குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்தில் இருந்து பயங்கரவாதிகள் தப்பி ஓடினர்.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ