பயங்கரவாதிகளை பிடிக்க களமிறங்கிய ராணுவம் - போலீஸ் | Terrorist Infiltration in Poonch | Indain Army
காட்டுக்குள் பதுங்கிய பயங்கரவாதிகள் விடாமல் துரத்தும் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம் ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் திங்களன்று இரவு ரோந்து பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவம் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதை சமாளிக்க முடியாத பயங்கரவாதிகள், லசானாவில் உள்ள மலைப்பாங்கான, அடர்ந்த காட்டுக்குள் பதுங்கினர். பயங்கரவாதிகள் ஊடுருவியதை உறுதி செய்த ராணுவம், தேடுதல் வேட்டையில் களம் இறங்கியது. ராணுவத்தின் ரோமியோ படை, சிறப்பு அதிரடிப்படை போலீசார் இணைந்து பயங்கவராதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டுக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதி அடர்ந்த காடு என்பதால், தேடுதல் வேட்டை சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. ஆனாலும் ரோமியோ படை பிரிவினர் மலைக்குன்றுகள், பாறை இடுக்குகள், அடர்ந்த காடு என அனைத்து இடங்களிலும் தேடுதலை தீவிரப்படுத்தி உள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக புதிய வகை பயங்கரவாத அலையை எதிர்த்து போராடி வருவதாக போலீஸ் ஐஜி துதி கூறினார். பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவியதும், அங்கு ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலும் காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்படும் என ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.