மகாராஷ்டிரா TET தேர்வு வினாத்தாள் கசியவிட்ட நபர் பீகாரில் கைது
மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் நடப்பதாக இருந்தது. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக வெளியாகன தகவலை அடுத்து தேர்வு நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தேர்வர்களை கொதிப்பில் ஆழ்த்தியது. இது குறித்து மகாராஷ்டிரா போலீசார் வழக்கு பதிந்து, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரித்தனர். ஹரியானா, பீகார், மகாராஷ்டிராவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்தது. இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய பங்காற்றிய பிஜேந்திர குமார் குப்தாவை போலீசார் தேடி வந்தனர். முதலில் அவரது மனைவியிடம் விசாரித்த போலீசார், பல்வேறு பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து பீகாரில் தலைமறைவாக இருந்த பிஜேந்திர குமார் குப்தாவை பிவண்டி போலீசார் இன்று கைது செய்தனர். இவர் ஏற்கனவே என்டிஏ நடத்திய பல்வேறு தேர்வுகளின் வினாத் தாள் கசிவில் தொடர்புடையவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #TETPaperLeake #TET #BijendraGupta #Bihar #MumbaiPolice #TetExamAccussed