தாய்லாந்து vs கம்போடியா: மிரட்டல் ராணுவம் யாருக்கு? thailand vs cambodia | thai drone attack video
தாய்லாந்து-கம்போடியா இடையே வெடித்த மோதல் ஆசியாவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரு நாடுகளும் மாறி, மாறி தாக்குதல் நடத்தின. 15 பேர் வரை கொல்லப்பட்டனர். 2வது நாளாக இன்றும் பயங்கர சண்டை நடக்கிறது. இரு நாடுகளும் பீரங்கிகளை வைத்து குண்டு வீசி வருகின்றன. தாய்லாந்து, கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை தொடர்கிறது. எல்லையில் இருக்கும் இந்து கோயிலையும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளையும் இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருவது தான் பஞ்சாயத்துக்கு முக்கிய காரணம். இது தொடர்பாக நடந்த சண்டையில் மே மாதம் கம்போடியாவை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். அன்று முதல் எல்லையில் கடும் பதற்றம் நிலவ ஆரம்பித்தது. இரு நாடுகளும் வர்த்தக உறவை துண்டித்தன. தூதரக அதிகாரிகளும் திரும்ப பெறப்பட்டனர். கம்போடியாவுக்கு செல்லும் எல்லை பகுதியை தாய்லாந்து மூடியது. அதன் பிறகு தான் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது. கம்போடியாவுக்குள் புகுந்து தாய்லாந்து போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. கம்போடியா ராணுவ முகாம்களை குறி வைத்து எஸ்-16 போர் விமானங்கள் குண்டு வீசின.