உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் வருமானம் எங்கே? இந்து முன்னணி கொந்தளிப்பு | Thaipoosam Pilgrimage | Murugan Temples

கோயில் வருமானம் எங்கே? இந்து முன்னணி கொந்தளிப்பு | Thaipoosam Pilgrimage | Murugan Temples

தைப்பூச நாளில் பக்தர்களுக்கு போதிய முன்னேற்பாடுகள் செய்துதரப்படவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டினார். தைப்பூச திருநாளில், திருச்செந்துார், பழனி, மருதமலை, சென்னிமலை, சமயபுரம் உள்ளிட்ட பல கோயில்களுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். கால் கடுக்க பல கி.மீ., துாரம் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு உரிய வசதி ஏற்படுத்தி தருவதே அறநிலையத் துறையின் கடமை. ஆனால், பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அறநிலையத்துறை நிர்வாகம் செயல்படுகிறது. சிறப்பு தரிசன கட்டணம் வசூலிப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்திவிட்டு, பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களை வஞ்சிக்கிறது.

பிப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ