அமைச்சர் வழக்குகளில் அடுத்தடுத்து விலகும் நீதிபதிகள் thangam thenarasu case | senthil balaji ed case
2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தனித்தனியாக கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2022ல் சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எதிரான வழக்குகளை சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு ஆய்வுக்கு எடுத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை கண்டித்து தங்கம் தென்னரசும், ராமச்சந்திரனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த கோர்ட், மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.