/ தினமலர் டிவி
/ பொது
/ அனைவரும் அவசர கதியில் டிஸ்சார்ஜ்! என்ன நடந்தது? | Thanjavur Government Hospital | Thanjavur
அனைவரும் அவசர கதியில் டிஸ்சார்ஜ்! என்ன நடந்தது? | Thanjavur Government Hospital | Thanjavur
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் ஏப்ரல் 24ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த ஒப்பந்த பணியாளர்களான செக்யூரிட்டிகள் , உதவியாளர்கள், செவிலியர் பயிற்சி மாணவியர் என பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பெண்கள், குழந்தைகளை உடனடியாக வேறு கட்டடத்துக்கு மாற்றினர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆய்வுக்கு வந்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம், துரிதமாக செயல்பட்ட ஒப்பந்த பணியாளர்களை பாராட்டி, மூச்சுத் திணறலால் இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் ஒப்பந்த பணியாளர்கள் 41 பேருக்கு மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு அட்மிட் செய்யப்பட்டு உள்ளனர்
ஏப் 28, 2025