உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் | Naducauvery | Naducauvery police

நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் | Naducauvery | Naducauvery police

தஞ்சாவூரை அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் வயது 32. நடுக்காவேரி பஸ் ஸ்டாண்டில் நேற்று உறவினர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக வர வேண்டும் எனக்கூறி தினேசை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். தினேஷின் சகோதரிகளான மேனகா மற்றும் கீர்த்திகாவும் நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். அண்ணனை கூட்டி வந்த காரணம் கேட்டு இன்ஸ்பெக்டர் ஷர்மிளாவிடம் வாக்குவாதம் செய்தனர். பொய் வழக்கு போடுவதாக சகோதரிகள் கூறியதால் வாக்குவாதம் முற்றியது. இன்ஸ்பெக்டர் ஷர்மிளா இருவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. சகோதரிகள் இருவரும் கோபத்துடன் வெளியேறி ஸ்டேஷன் வாசல் முன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர்.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை