/ தினமலர் டிவி
/ பொது
/ நொடியில் வீடு தரைமட்டம்: மயிலாடுதுறையில் சம்பவம் Tharangampadi | 150 years old house | damaged |No
நொடியில் வீடு தரைமட்டம்: மயிலாடுதுறையில் சம்பவம் Tharangampadi | 150 years old house | damaged |No
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, தரங்கம்பாடியில் பெய்யும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் திருக்களாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பாலூர் கிராமத்தின் தெற்கு தெருவில் சுமார் 150 ஆண்டு பழைமையான வீடு இடிந்து விழுந்தது. வீட்டின் பின்பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் பொன்னுதுரை, நீதிராஜன், லலிதா ஆகியோர் 3 குடும்பங்களாக வசித்து வந்தனர். முன்பகுதி மட்டுமே இடிந்ததால் யாருக்கும் எந்த காயமும்இல்லை. அதிகாரிகள் வந்து அந்த மூன்று குடும்பத்தினரை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்
நவ 27, 2024