கோவையில் போலீசையே அதிர வைத்த திருடன் | theft | Mobile Theft | CCTV
ஊட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன், வயது 75. வக்கீலாக உள்ளார். கடந்த ஞாயிறன்று கோவை வந்துள்ளார். சொந்த வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் ஊட்டி செல்ல பஸ் ஏறி இருக்கிறார். அப்போது அவரது அருகில் இருந்த ஆசாமி ஹரிஹரன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடினார். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். சக பயணிகள் திருட்டு ஆசாமியை பிடிக்க முயன்றனர். ஆனால் நெரிசல் மிகுந்த இடத்தில் பஸ்சில் இருந்து இறங்கி அவன் தப்பி சென்றான்.
ஜன 08, 2025