தீவிர முஸ்லிம்களால் கலவரக்காடான பாகிஸ்தான்-பதற்றம் thehreek e labbaik pakistan Protest | tlp | hamas
பாகிஸ்தானில் டிஎல்பி எனப்படும் தெஹ்ரிக் இ லப்பை என்னும் அரசியல் கட்சி செயல்படுகிறது. இது ஒரு தீவிர முஸ்லிம் அரசியல் கட்சியாகும். காசா விவகாரத்தில் இந்த கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே நீடித்து வந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் ஹமாசுக்கு இருந்த அதிகாரம் பறிபோகும் என்று பாகிஸ்தானின் டிஎல்பி கட்சி கவலைப்படுகிறது. ஹமாசுக்கு ஆதரவாக தான் 10ம் தேதி முதல் தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதைத் தடுக்க ராணுவம் நடவடிக்கையை பாகிஸ்தான் கையில் எடுத்தது. இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்தது. தெருக்கள் கலவரக்காடாக மாறின. போராட்டத்தில் போலீஸ், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான போராட்டக்காரர்களும் இறந்தனர். இருப்பினும் போராட்டம் ஓயவில்லை. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி நேற்று ஏராளமானோர் பேரணி செல்ல முயன்றனர். அதை முறியடிக்க பாகிஸ்தான் ராணுவம் நடத்திய நடவடிக்கைகளில், தெஹ்ரிக் இ லப்பை கட்சி ஆதரவாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர்; 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டிஎல்பி ஆதரவாளர்கள் கற்கள், கம்புகள், பெட்ரோல் குண்டுகள், துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியதால், பதிலடி கொடுத்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. இதுவரை 90 போலீசார் காயமடைந்துள்ளதாக அவர்கள் கூறினர். டிஎல்பி போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களால், பாகிஸ்தான் முழுதும் பதற்றம் நிலவி வருகிறது. #thehreekelabbaikpakistan #TLPProtestinPakistan #PakistanIssue #SharifGovt #IsraelVsHamas #GazaPeacePlan #PakistanPolitics #ProtestAwareness #GeoPolitics #JusticeForGaza #ReligiousFreedom #HamasIsraelConflict #GwadarProtest #PoliticalReform #CurrentAffairs #SocialJustice #PeaceProcess #MiddleEastConflict #YouthActivism