கறிக்கடை முன் விழுந்த மூட்டை: அலறியடித்து ஓடிய மக்கள் | Theni | Meat Shop
தேனி மாவட்டம் தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் மணியரசன். இவரது கறிக்கடைக்கு சுடுகாட்டில் வேலை பார்க்கும் குமார் என்பவர் அடிக்கடி வந்து கறி வாங்கி செல்வது வழக்கம். அவருக்கு மணியரசன் இலவசமாக கறி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல இன்று காலை கடைக்கு வந்த குமார் இலவசமாக கறி கேட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் இலவசமாக கறி கொடுக்க மணியரசன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார் சிறிது நேரம் கழித்து ஒரு மூட்டையுடன் கறிக்கடைக்கு வந்தார். சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பெண் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.