அதிகாலையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை | Theni | Nursing Student
தேனி அருகே ஓடும் காரில் 4 பேர் நர்சிங் மாணவி அதிர்ச்சி தகவல் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் திங்களன்று அதிகாலை ஒரு பெண் சோர்வடைந்த நிலையில் நின்றிருந்தார். அவரை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். கேரளாவை சேர்ந்தவர் என்பதும், தேனியில் நர்ஸ்சிங் படிப்பதாகவும் கூறினார். மேலும் அவரிடம் விசாரித்த போது பல அதிர்ச்சிகள் வெளிவந்தது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவர் நேற்று தேனி வந்துள்ளார். தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றனர். ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
செப் 23, 2024