உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெயின் கேட்டை திறந்து தப்பிய கைதிகள் டீம் | Theni Jail | Prisoners Escape

மெயின் கேட்டை திறந்து தப்பிய கைதிகள் டீம் | Theni Jail | Prisoners Escape

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி சென்றது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 கைதிகள் பிடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 4 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சிறை துறை அளித்த விளக்கம்; 2019ல் துவங்கப்பட்ட தேனி மாவட்ட சிறையில் 200 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. 26ம் சிறையில் மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். அங்கு சென்ற ஜெயிலர் ஸ்டாலின் பிரபுவை கைதிகள் தாக்கி உள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும் தாக்கி சாவிகளை பறித்தனர். சிறையின் மெயின் கேட்டை திறந்து 17 கைதிகள் தப்பி சென்றனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி 9 சிறைப் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தப்பிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைக்கப்பட்டு தேனி மதுரை சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. #Theni #TheniJail #PrisonersEscape #TheniCrime #CrimeNews #TamilNews #BreakingNews #TamilNaduPolice #TheniJailEscape #TheniPrisonersEscape

அக் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !