உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 போலீஸ் அடிச்சி நாய் மாதிரி இழுத்துட்டு போனாங்க: நடந்தது என்ன? Theni police assault video Devad

2 போலீஸ் அடிச்சி நாய் மாதிரி இழுத்துட்டு போனாங்க: நடந்தது என்ன? Theni police assault video Devad

திருபுவனம் கோயில் ஊழியர் அஜித்குமாரின் லாக்கப் மரணம் போலீசாருக்கு எதிராக, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அதேநேரத்தில் தேனி மாவட்டம் தேவதானம்பட்டியில் ஆட்டோ டிரைவர் ரமேைஷ போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்று கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, தேவதானம்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். ரமேஷ் விவகாரத்தில் என்ன நடந்தது? என அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரமேஷ் விசாரணைக்கு ஆஜரானார். சம்பவத்தன்று என்ன நடந்தது? என ஏஎஸ்பி ஜெரால்ட் விசாரணை நடத்தினார். அதன்பிறகு, தனக்கு நடந்த கொடுமையை ரமேஷ் விவரித்தார். எல்லாரையும்போல பொங்கல் அன்னைக்கு குடித்தேன்; அது தேச துரோக குற்றமா? என்றார். பஸ்சை இவ்ளோ வேகமா ஓட்றீங்களேனு டிரைவரை தட்டிக் கேட்டேன்; பஸ் முன்னாடி போய் நின்னேன்; குடிச்சிட்டு கலாட்டா பண்ணேன்னு 2 போலீஸ்காரங்க என்னைய நாய் மாதிரி அடிச்சி இழுத்துக்கிட்டு போனாங்க என விளக்கமாக சொன்னார். போலீஸ் அடிச்சதுல இன்னும் கூட முழுசா வலி போகலை; அம்மா அப்பாவுக்கு தெரியாம மாத்திரை வாங்கி சாப்பிட்டேன் எனவும் ரமேஷ் மனவேதனையுடன் சொன்னார். பஸ்சை மறிச்சதுக்கே இந்த அடின்னா; போலீஸ்காரங்க அடிச்சாங்கனு புகார் பண்ணா என் குடும்பத்தை விட்டு வைப்பாங்களா? அதனாலதான் இது நடந்து 6 மாதமாகியும் யாரிடமும் புகார் செய்யவில்லை என்றார். தேனியை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, தேவதானம்பட்டி போலீஸ் நிலைய சிசிடிவி வீடியோவை கேட்டுப்பெற்று, போலீசாரின் அடக்குமுறையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். பொங்கலன்று ஆட்டோ டிரைவர் ரமேஷ் கைது செய்யப்பட்டபோது சம்பவ இடத்தில் இருந்த தேவதானம்பட்டியை சேர்ந்த 50க்கு மேற்பட்ட பொதுமக்களிடமும் ஏஎஸ்பி ஜெரால்ட் விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை தேனி எஸ்பி சிவபிரசாத்திடம் ஜெரால்ட் விரைவில் தாக்கல் செய்வார் என தெரிகிறது.

ஜூலை 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !