ஒன்றிய மாஜி தலைவி கதறல்; தென்காசியில் பதற்றம் | Thenkasi Admk Funtionary | Thenkasi Police Crime
வாக்கிங் சென்ற அதிமுக நிர்வாகி விரட்டிச் சென்று சாய்த்த கும்பல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெளியப்பன் (52) அதிமுக பிரமுகர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி மாரிச்செல்வி மேலநீலிதநல்லூர் ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர். இன்று அதிகாலை வழக்கம்போல வெளியப்பன் நடைபயிற்சிக்கு சென்றார். கிராமத்தின் பிரதான சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3, 4 பேர் பேர் அவரை வழிமறித்தனர். உடனே வெளியப்பன் பயந்து போய் ஓட்டம் பிடித்தார். அந்த கும்பல் விரட்டிச்சென்று, வெளியப்பனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இதைப் பார்த்து கிராமவாசிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.