உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதறவைத்த கவர்மென்ட் ஆஸ்பிட்டல்... ஊரே கதறும் பகீர் பின்னணி thenmalai PHC video | Sivakiri girl issue

பதறவைத்த கவர்மென்ட் ஆஸ்பிட்டல்... ஊரே கதறும் பகீர் பின்னணி thenmalai PHC video | Sivakiri girl issue

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிப்பட்டணம் தெருவை சேர்ந்த கர்ணன் மகள் சிவகார்த்திகா வயது 8. சிறுமியை விஷ பாம்பு கடித்ததால், உறவினர்கள் அவளை தூக்கிக்கொண்டு தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்தியம் பார்க்காமலேயே மேல் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே சிறுமி சிவகார்த்திகா பிரிதாபமாக இறந்தாள். சிறுமியின் மரணத்துக்கு தென்மலை ஆரம்ப சுகாதார நிலையம் காட்டிய அலட்சியம் தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். பேச்சு வார்த்தைக்கு வந்த போலீசாரிடம் கதறி அழுதனர். அப்போது தான் சுகாதார நிலையம் பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. சிவகார்த்திகாவை சிகிச்சைக்கு கொண்டு வந்த போது டாக்டர் இல்லை. ஒரே ஒரு நர்ஸ் மட்டும் இருந்தார். அவரும் சிறுமியை தொட்டுக்கூட பார்க்கவில்லை. இங்க ஏன் கொண்டு வந்த. தூக்கிட்டு போ தூக்கிட்டு போனு கத்தினார். அப்போது எதுக்கு நர்ஸ் இருக்கனும் என்று சிறுமியின் தாய் கொந்தளித்தார்.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ