பைக்கை போட்டு விட்டு ஓட்டம்: வண்டியில் அடிபட்டு திருடன் பலி Thief dies accident HIghways tirupattur
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மேல்மல்லபள்ளி கொய்யா மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அனிதா (29). வழக்கம்போல நேற்று இரவு இருவரும் தூங்கச் சென்றனர். நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கேட்டை யாரோ உடைப்பவது போல சத்தம் கேட்டுள்ளது. பக்கத்து வீட்டில்தான் மாமனார், மாமியார் வசிக்கின்றனர். உடனே அனிதா மாமனாருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். பக்கத்து வீட்டில் இருந்து மாமனார் வெளியே வந்து பார்த்தபோது 2 ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கத்தி கூச்சலிடவே திருடர்கள் பயந்து போனார்கள். தங்களது இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு இருவரும் இரு பக்கம் தப்பி ஓடினர். அனிதாவின் மாமனார் உள்ளிட்ட சிலர் விரட்டிச் சென்றார். வீட்டுக்கு மிக அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. ஒரு திருடன் நெடுஞ்சாலையை கடந்து தப்பி ஓடி விட்டான். 2வது திருடன் நெடுஞ்சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனான். மோதிய வாகனமும் நிற்காமல் சென்று விட்டது. திருடன் வாகனத்தில் அடிபட்டு இறந்து போனதை பார்த்து அவ்வூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் விரைந்து சென்று திருடனின் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #ThiefAccident #Tirupattur #Natrampalli #TamilNaduPolice #CrimeNews #TheftAttempt #WomenSafety #LocalNews #TamilNadu #CrimeReport #HighwayAccident #ThiefCaught #PoliceInvestigation #CommunitySafety #TamilNaduCrime