/ தினமலர் டிவி
/ பொது
/ சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிக்கிக்கொண்ட நண்பர்கள் 2 Thief | Theft jewel | Kanyakumari
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிக்கிக்கொண்ட நண்பர்கள் 2 Thief | Theft jewel | Kanyakumari
கன்னியாகுமரி, அருமனை அடுத்த அண்டுகோட்டையை சேர்ந்தவர் சுபாஷ். பேங்க் மேனேஜர். இவரது வீட்டில் கடந்த மார்ச் 20ல் கொள்ளை சம்பவம் நடந்தது. பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த ரப்பர் பால் எடுக்கும் தொழிலாளி விஜயகுமார் மீது சந்தேகம் வந்தது. அவரை விசாரித்தபோது, உண்மை வெளிவந்தது. விஜயகுமார் கேரளாவிற்கு வியாபாரத்திற்கு செல்லும்போது, திருவனந்தபுரத்தை சேர்ந்த கொத்தனார் ராஜனின் நட்பு கிடைத்திருக்கிறது. பாரில் மது குடிக்கும்போது நண்பர்கள் ஆகி உள்ளனர். குறுக்க வழியில் உடனே பணக்காரர்கள் ஆக வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டனர்.
ஏப் 12, 2025