உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செந்தூர் கடலில் மீண்டும் திடுக்-பரபரப்பு வீடியோ | thiruchendur sea issue | tiruchendur temple

திருச்செந்தூர் கடலில் மீண்டும் திடுக்-பரபரப்பு வீடியோ | thiruchendur sea issue | tiruchendur temple

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயில் முன்புள்ள கடலில் நீராடிவிட்டு, பின்னர் சாமி கும்பிடுவது வழக்கம். இன்று காலை முதல் நிறைய பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அப்போது, திடீரென கடல் உள் வாங்கியது. 50 மீட்டர் தூரம் வரை கடல் உள்ளே இழுத்துக்கொண்டதால், நீராடிய பக்தர்கள் பயத்தில் வெளியே ஓடி வந்தனர். நாழிக்கிணறு முதல் அய்யா கோயில் வரை சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு கடல் உள் வாங்கியது. கடலுக்குள் மறைந்திருந்த பாறைகள் அப்படியே வெளியே தெரிந்தன. பக்தர்களும் சுற்றுலா பயணிகள் பலரும் கடலில் இறங்கி நீராட அச்சப்பட்டனர்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ