திருக்குறளுக்கு இசையமைத்து பாடிய கல்லூரி ஆசிரியர், மாணவிகள்! Thirukkural | Music composition
இசை வடிவில் திருக்குறள்! மாணவிகள் சாதனை முயற்சி திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திருக்குறளுக்கு இசையமைத்து பாடும் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 75 திருக்குறளுக்கு இசையமைத்து பாடி சாதனை நிகழ்த்தினர். கடவுள் வாழ்த்து, அன்புடைமை, இனியவை கூறல், ஈகை, வாய்மை, மெய்யுணர்தல், அவா அறுத்தல், துறவு ஆகிய அதிகாரங்களில் உள்ள 75 குறள்களுக்கு இசைத்துறை தலைவர் லலிதாம்பாள் இசையமைத்தார். அதனை மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட 3200 பேர் ஒன்றிணைந்து பாடினர். இந்த உலக சாதனை முயற்சி விருக்சா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. திருக்குறளை இசையுடன் பாடும் போது எளிதில் புரிந்து கொள்ள முடியும். வரும்காலத்தில் 1330 குறளுக்கும் இசையமைத்து பாட முயற்சிகள் நடந்து வருவதாகவும் மாணவிகள் கூறினர்.