திருப்பரங்குன்றத்தில் சிஆர்பிஎப் படை வீரர்கள் குவிப்பு Thiruparankundram | CRPF | Karthigai Deepam
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் நவ.24ம் தேதி கர்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், வழக்கம் போல உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்பான அவமதிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. மேலும், உள்ளூர் போலீசாரின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கோவில், தர்கா மற்றும் ஒட்டுமொத்த மலையின் பாதுகாப்பையும் சிஆர்பிஎப் தன்வசம் எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து கோவை, சென்னை, பெங்களூருவில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் நள்ளிரவில் துப்பாக்கிகளுடன் திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர். #Thiruparankundram #CRPF #SupremeCourt #DeepaThoon #Madurai #KarthigaiDeepam #MaduraiNews #TamilNaduNews #DinamalarNews