உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தி.குன்றம் தீபம் உரிமையை காக்க அடுத்த அதிரடி | thiruparankundram | deepam case | hindu issue vs dmk

தி.குன்றம் தீபம் உரிமையை காக்க அடுத்த அதிரடி | thiruparankundram | deepam case | hindu issue vs dmk

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் தனி நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன் மூன்று முறை உத்தரவிட்டும் அதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அரசு தரப்பு, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட மொத்தம் 26 பேர் சார்பில் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். 1996ம் ஆண்டில் கோர்ட் பிறப்பித்த உத்தரவில் உச்சிப்பிள்ளையார் கோயிலிலும் மாற்று இடத்திலும் தீபம் ஏற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை பின்பற்றி தேவஸ்தானம் மலை உச்சியில் உள்ள கல்தூண் என்று கூறப்படும் தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு மத்திய தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்பட தமிழக அரசே காரணம். தீபத் தூண் விவகாரத்தில் அரசு, அரசியல் காரணங்களோடு செயல்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண் தான். அது தேவஸ்தான இடத்தில் தான் உள்ளது. எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். மேல் முறையீடு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதை மதுரை மாவட்ட கலெக்டர் மேற்பார்வை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கினர். முருக பக்தர்களும் இந்து அமைப்பினர்களும் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதை எதிர்த்தும் மேல்முறையீடு செய்வோம் என்று அடாவடி செய்கிறது திமுக. இரு நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று திமுக அமைச்சர் ரகுபதி கூறினார். இதை எதிர்கொள்ள திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு மனுதாரர்களும் தயாராகி விட்டனர். முதல் கட்டமாக மனுதாரர் ராம ரவிகுமார் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசோ அல்லது மற்றவர்களோ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று அதில் ராம ரவிகுமார் கூறி உள்ளார். #ThiruparankundramCase #MaduraiCourtJudgement #DeepamIssue #DMKvsBJP #LegalBattle #Judiciaries #PoliticalDrama #CurrentAffairs #IndianPolitics #CourtDecision #TamilNaduNews #JusticeServed #LegalUpdates #StatePolitics #BJPInTamilNadu #DMK #CivilRights #PoliticalDebate #JudicialSystem #PublicInterest

ஜன 07, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

A S Krushnamurthy
ஜன 11, 2026 12:43

Super God will win


A S Krushnamurthy
ஜன 11, 2026 12:41

சூப்பர் valthukkal


K r Madheshwaran
ஜன 11, 2026 06:43

தீபத்திருநாள் விசயம் மட்டுமல்ல இன்னும் பலப்பல விசயங்களை இந்து விரோத திராவிடியா அரசு விரோதமாக பணத்தை ஏதோ மழைக்கால வெள்ளநீரை வீணாக்குவதுபோல கையாண்டு இந்துக்களின் மூச்சான நம்பிக்கையைநாசபடுத்தி இருக்கும் மக்கள் காணிக்கையான கோவில் சொத்தைகள் வாடும் அரசாகவே மேலும் கோவிலிலேயே அராஜகத்தை நடத்துமளவு மனிதாபிமானமற்ற அரசாக திகள்வது இந்துக்களுக்கு மற்றுமொரு இன பாதுகாப்பு ஒற்றுமை உணர்வு நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்துக்கள் இனிமேலும் இதுபோன்ற கயவர்களை நம்பாமல் இனவேறுபாடுகளை கலைந்து எதிர்காலத்தில் தக்கமுடிவைஎடுக்க அதிலும் போர்க்கால முடிவெடுக்கும் நிலை


Naga Rajan
ஜன 11, 2026 04:07

மாண்புமிகு நீதியரசர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கலந்த வணக்கங்கள்... நீதிதேவதை வென்றது மிகவும் மகிழ்ச்சி.. இருப்பினும் தற்போதைய தமிழக அரசு ரௌடித்தனமாக செயல்படுவதாக தெரிகிறது. இது அரக்கத்தனமாகும். மக்களுக்காக தான் அரசே தவிர சில கயமைத்தனம் கொண்டவர்களுக்கு மட்டுமான அரசாக செயல் படுவது வேதனையை தருகிறது.


D.Ambujavalli
ஜன 08, 2026 05:59

அரசின் இந்த வறட்டுப் பிடிவாதத்தால் மக்களின் வரிப்பணம் அனாவசியமாக வக்கீல்களுக்கு, court செலவுக்கும் பாய்கிறது நீதிமன்றத்தின் நேரமும் வீணடிக்கப்படுகிறது வேண்டுமானால் அவர்கள் கொள்ளையடித்து சேர்த்த கோடிகளை வழக்குகளுக்காக வாரி இறைக்கட்டுமே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை