உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபம் ஏன் ஏற்றல? கொந்தளித்த நீதிபதி | Thiruparankundram Case | Deepam Issue | GR Swaminathan | DMK

தீபம் ஏன் ஏற்றல? கொந்தளித்த நீதிபதி | Thiruparankundram Case | Deepam Issue | GR Swaminathan | DMK

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், இந்த முறை மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மூன்று முறை இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தும் திமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. உத்தரவை எதிர்த்து அப்பீலுக்கு போனது. நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக எம்பிக்கள் பார்லியில் தீர்மானமும் கொண்டு வந்தனர். இந்த பரபரப்பான சூழலில், திமுக அரசு கோர்ட் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனியோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். தலைமை செயலாளர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார்கள். #ThiruparankundramCase #DeepamIssue #GRSwaminathan #DMK #TamilNaduPolitics #PoliticalDebate #SocialJustice #JusticeForAll #CivicEngagement #CurrentAffairs #PoliticalCommentary #LegalMatters #CommunityIssues #InclusivePolicy #DemocracyInAction #ActiveCitizens #GrassrootsMovement #PoliticalAwareness #ReformsForChange

டிச 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை