தீபம் ஏற்ற சென்ற பாஜவினரை கீழே தள்ளிய போலீஸ் thiruparankundram deepam case | dmk vs bjp | karthigai
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான்; அங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த திமுகவுக்கு இது சம்மட்டி அடி என்று முருக பக்தர்கள், இந்து அமைப்பினர், பாஜவினர் கூறினர். தமிழகம் முழுதும் தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டங்கள் நடந்தன. தீர்ப்பை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்போவதாக அம்மாவட்ட பாஜ தலைவர் ஜெகதீசன் தலைமையிலான நிர்வாகிகள் அறிவித்தனர். இதையொட்டி டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமையில் கோயில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். மாலையில் அரோகரா கோஷம் முழுங்க பாஜவினர் கோயில் நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாஜவினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போலீசாரின் இடிபாடில் சிக்கி மாவட்ட தலைவர் ஜெகதீசன் ரோட்டில் விழுந்ததால் பரபரப்பை ஏற்பட்டது. போலீசாருடன் பாஜவினர் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். #ThiruparankundramDeepamCase #DMKvsBJP #KarthigaiDeepam #TamilNaduPolitics #FestivalOfLights #DeepamCelebration #PoliticalDrama #HinduFestivals #FestiveVibes #CulturalHeritage #FestivalDebate #LightsOfKarthigai #CommunityFestivities #DravidianPolitics #PoliticalTensions #CandlelightsAndCurry #TraditionMeetsPolitics #ReligiousFestivals #KarthigaiFestival #TamilCulture