உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபம் விவகாரம்-டில்லியிலும் மூக்குடைந்த திமுக thiruparankundram issue |dmk vs bjp |CPR parliament

தீபம் விவகாரம்-டில்லியிலும் மூக்குடைந்த திமுக thiruparankundram issue |dmk vs bjp |CPR parliament

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மூன்று முறை நீதிபதி உத்தரவிட்டும், திமுக அரசு அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அரசுக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தீபம் ஏற்றாதது ஏன் என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி அளித்த உத்தரவுக்கு எதிராக திமுக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்திருக்கிறது. இன்னொரு பக்கம், பார்லிமென்ட்டின் இரு சபையிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். சபையின் வழக்கமான நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு திருப்பரங்குன்றம் விவகாரத்தை மட்டும் விசாரிக்க கோரி இரு சபையிலும் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். லோக்சபாவில் திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அதே போல் ராஜ்ய சபாவிலும் சபை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், திமுக எம்பிக்கள் கொண்டு வந்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை நிராகரித்தார். இதனால் ராஜ்ய சபாவில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் அமளி செய்தனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை விவாதிக்க கோரி கூச்சலிட்டனர். சபையில் பரபரப்பான சூழல் நிலவியது.

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ