உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளியே புதுசு உள்ளே பழசு! மேயரை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி | Madurai Mayor | Thiruparankundram Bus

வெளியே புதுசு உள்ளே பழசு! மேயரை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி | Madurai Mayor | Thiruparankundram Bus

மதுரை திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்டில் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குளியல் மற்றும் கழிப்பறை கட்டடத்தை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன் திறந்து வைத்தனர். வெளியே புதிது போல் ஜொலித்தாலும் அருகே சென்று பார்த்தால் பல இடங்களில் பூச்சு வேலை சரியில்லாமல் பெயிண்ட் உதிர்ந்து காணப்பட்டது. Breath கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்த மேயரை மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகையிட்டனர். நீங்க வந்ததால் தான் இந்த பகுதியை சுத்தம் செஞ்சிருக்காங்க. துர்நாற்றம் வீசும். தண்ணீர், கரண்ட் வசதி இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை