உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வழிபாட்டு உரிமையை நசுக்குகிறது திமுக அரசு: இந்துக்கள் கொதிப்பு

வழிபாட்டு உரிமையை நசுக்குகிறது திமுக அரசு: இந்துக்கள் கொதிப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டும் தீபம் ஏற்றவில்லை. இந்து அமைப்பினர் போராட்டம்நடத்தினர். கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் மலையில் தீபம் ஏற்ற நீதிபதி அனுமதி அளித்தார். CISF படையினர் பாதுகாப்புக்கு செல்லவும் உத்தரவிட்டார். அதன்படி, தீபம் ஏற்ற சென்றவர்களை போலீசார் தடுத்தனர். கோர்ட் உத்தரவை காட்டியும், போலீசார் விடாப்பிடியாக மறுத்துவிட்டனர். 144 தடை உத்தரவு மற்றும் அரசு அப்பீல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி மலை ஏற மனுதாரர் உள்ளிட்டோரை விடவில்லை. இதனால், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் மலைக்கு செல்லும் பாதை முன் சூடம் ஏற்றி மலையின் மீது நிச்சயம் தீபம் ஏற்றியே தீருவோம் என சபதம் எடுத்து முருகனை வணங்கி கலைந்து சென்றனர். #ThiruparankundramDeepamFestival #ThiruparankundramIssue #BJPvsDMK #HinduIssue #FestivalCelebration #CultureAndReligion #PoliticalDebate #TamilNaduPolitics #ReligiousFestivals #CommunityUnity #HinduHeritage #SouthIndiaCulture #FestivalOfLights #Thiruparankundram #FaithAndPolitics #HinduCommunity #IndiannFestivals #PoliticalTensions #UnityInDiversity

டிச 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை