உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே இரவில் தந்தை, தாய், சகோதரனை இழந்த 5 வயது சிறுவன் | thiruporur accident | 3 died

ஒரே இரவில் தந்தை, தாய், சகோதரனை இழந்த 5 வயது சிறுவன் | thiruporur accident | 3 died

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் பலமா நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ், வயது 35. சிறுசேரியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்கிறார். நேற்று காலை மனைவி, 2 குழந்தைகளுடன் காயாரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு மீண்டும் தையூர் புறப்பட்டார். 4 பேரும் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்த நிலையில், கேளம்பாக்கத்தில் இருந்து காயார் செல்லும் சாலையில் எதிரே அதிவேகமாக வந்த கார் ஹரிதாஸ் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. 4 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், கார் டயரில் சிக்கிய ஹரிதாஸ், 10 வயது மூத்த மகன் லியோ டேனியல் இருவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை