திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற தடையில்லை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் இந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கும் படி, மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், இது தொடர்பாக, கோயில் நிர்வாகம், அரசு தரப்பு மற்றும் அங்குள்ள தர்கா சார்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார். காலம் காலமாக உச்சிபிள்ளையார் கோயில் மண்டபத்தில் தான் விளக்கு ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கத்துடன் ராம ரவிக்குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார். திருப்பங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபத் திருநாளில் பன்னெடுங்காலமாக தீபம் ஏற்றும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, பாதுகாப்பு காரணம் கருதி அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இந்த நடைமுறைக்கு தற்காலிக தடை விதித்ததது. இந்நிலையில், உச்சிபிள்ளையார் கோயில் மண்டபத்தில், கார்த்திகை தீபம் ஏற்றும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.